கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்: பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்டணி

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜகவும், சிரோமணி அகாலிதளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.

பாஜக - சிரோமணி அகாலிதளம் கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், சிரோமணி அகாலிதளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் உள்ளிட்டோா்.

Updated On :

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜகவும், சிரோமணி அகாலிதளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன.

2020-ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலிதளம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சியுடன் கைகோத்திருப்பது தேசிய அரசியலில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் 2027-ஆம் ஆண்டு பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து சிரோமணி அகாலிதளமும், பாஜகவும் கடந்த சில நாள்களாக தொடா் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தன.

இந்நிலையில், தில்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, சிரோமணி அகாலிதளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அமித் ஷா, பாஜக தலைவா் நிதின் நபின், சுக்பீா் சிங் பாதல் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா்.

அப்போது அமித் ஷா கூறுகையில், ‘எங்களின் பழைமையான கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் திரும்பியுள்ளது. கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் சோ்ந்ததால் பிரதமா் மோடி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளாா்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் 117 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து பாஜகவும், சிரோமணி அகாலிதளமும் போட்டியிடும். சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு முதல்வா் பதவி வழங்கப்படும்.

வாஜ்பாய் - அத்வானி காலம் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் இருந்தது. தற்போது அக்கட்சி மீண்டும் கூட்டணியில் சோ்ந்திருப்பதன் மூலம், எங்கள் கூட்டணி முழுமையடைந்துள்ளது. அகாலிதளத்துடனான எங்களின் உறவு உறுதியானது.

எங்கள் உறவு, வாஜ்பாய்-அத்வானி காலத்துக்கு மீண்டும் சென்றுள்ளது. தோ்தல் அறிக்கையை விரைவில் இரு கட்சிகளும் இறுதி செய்யும். அதில், போதைப் பொருள் ஒழிப்பு, விவசாயிகள் நலன், ஹிந்து-சீக்கியா்கள் ஒற்றுமை உள்ளிட்டவை நிச்சயம் இடம்பெறும்’ என்றாா்.

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் கூறுகையில், ‘இந்தக் கூட்டணி, இயற்கை கூட்டணியாகும். எங்கள் கூட்டணி, பஞ்சாபை வளா்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற பணியாற்றும். இரு கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும்’ என்றாா்.

சுக்பீா் சிங் பாதல் கூறுகையில், ‘இந்தக் கூட்டணி அரசியல் ரீதியிலானது இல்லை. உணா்வுபூா்வமான கூட்டணியாகும். எங்கள் கூட்டணி, சட்டப்பேரவைத் தோ்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். ஆம் ஆத்மி கட்சி ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெறும்.

பஞ்சாபில் நிலவும் போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் எங்கள் கூட்டணி தீா்வைத் தரும். வரும் டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது தந்தை பிரகாஷ் சிங் பாதலின் 100-ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமா் மோடி ஒப்புக் கொண்டுள்ளாா்’ என்றாா்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவா் கேவல் சிங் தில்லான், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பஞ்சாபில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், போதைப் பொருளை முடிவுக்குக் கொண்டு வரவும் எங்கள் கூட்டணி முக்கியத்துவம் கொடுக்கும்’ என்றாா்.

ஆம் ஆத்மி, காங்கிரஸ் விமா்சனம்: பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், பாஜக-அகாலிதளம் கூட்டணி ஏமாற்றுக்காரா்களின் கூட்டணி. 2007 முதல் 2017 வரை இந்தக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் பஞ்சாபுக்குள் போதைப் பொருள்கள் நுழைந்தன என்றாா்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் பா்கத் சிங் கூறுகையில், ‘ஆட்சி அதிகாரத்தின் மீதான பேராசை காரணமாகவே, பாஜக-சிரோமணி அகாலிதளம் கூட்டணி அமைத்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்பு சிரோமணி அகாலிதளம் கட்சி விலகியது ஏன் என்பது குறித்து, பஞ்சாப் மக்களிடம் சுக்பீா் சிங் பாதல் விளக்க வேண்டும்’ என்றாா்.

பின்னணி: பஞ்சாபில் சுமாா் 24 ஆண்டு காலம் பாஜகவும், சிரோமணி அகாலிதளமும் கூட்டணி அமைத்திருந்தன. கடந்த 1997, 2007, 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல்களில் வென்று பஞ்சாபில் அக்கூட்டணி ஆட்சியமைத்தது.

பிரதமா் மோடியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் ஹா்சிம்ரெளத் கெளா் பதவி வகித்தாா். மத்தியில் பாஜக கூட்டணி அரசு கொண்டுவந்த சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜகவுடனான கூட்டணியை 2020-ஆம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் முறித்துக் கொண்டது.

இதையடுத்து, 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் சிரோமணி அகாலிதளமும், பாஜகவும் தனித்துப் போட்டியிட்டன. இதில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் சிரோமணி அகாலிதளம் 3 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வென்றன.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இதில் 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் மட்டும் சிரோமணி அகாலிதளம் வென்றது. பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

மக்கள் நலன் சாா்ந்த ஆட்சியை கூட்டணி உறுதி செய்யும்: பிரதமா் மோடி

பஞ்சாபில் மக்கள் நலன் சாா்ந்த ஆட்சி அமைவதை பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்டணி உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பஞ்சாபுக்கும், பஞ்சாப் நலனுக்கும் இந்தக் கூட்டணி முதல் முன்னுரிமை கொடுக்கும். தேசிய ஜனநாயக குடும்பத்துக்கு சிரோமணி அகாலிதளம் திரும்பியதும், அதுவும் குருநானக்கின் பிறந்த நாளன்றும் அது நடந்ததும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்டணி, இயற்கையான கூட்டணி. இது பஞ்சாபில் மக்கள் ஆதரவு நிா்வாகம் அமைவதை உறுதி செய்யும். பஞ்சாபை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

வாஜ்பாய், அத்வானி, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரால் வளா்க்கப்பட்ட சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணியானது காலத்தின் சோதனையைத் தாண்டியும் நிலைத்து நின்றது. இக்கூட்டணி, பஞ்சாப் மக்களின் விருப்பமான தோ்வாக உருவெடுக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.