கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

காசியில் 11 லட்சம் தீபங்கள், 2100 டிரோன்கள் மூலம் ஒளிர்ந்த கங்கைக்கரை!

கங்கை நதிக்கரையோரம் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது குறித்து...

The banks of the Ganges in Kashi illuminated by 1.1 million lamps and 2,100 drones

கங்கை நதிக்கரையில் ஏற்றப்பட்ட தீபங்கள் - படம் | பிடிஐ

Updated On :

காசியில் தேவ தீபாவளி திருவிழாவையொட்டி கங்கை நதிக்கரையோரம் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதுமட்டுமின்றி 2100 டிரோன்கள் மூலம் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தப்பட்டது.

கடவுள், இறை மொழிகள் வானில் டிரோன் காட்சிகளாக இடம்பெற்றன. இதனால் கங்கைக் கரை முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் கார்த்திகை பௌர்ணமி நாளான இன்று (நவ. 24) தேவ தீபாவளி எனப்படும் ஒளித் திருவிழா கொண்டாடப்பட்டது. கார்த்திகை பெளர்ணமி நாளான இன்று தேவர்கள் பூமிக்கு வந்து கங்கையில் நீராடுவதாக நம்பப்படுகிறது.

இதனால் கங்கை நதிக்கரையோரம் தீபங்கள் ஏற்றி ஆண்டுதோறும் இந்நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கங்கை நதிக்கரையோரம் சூரியன் மறைந்த பிறகு 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

மாலை முதலே மண் அகல் விளக்குகளை அடுக்கும் பணி நடைபெற்றது. அதில் எண்ணெய்த் திரியிட்டு தீபம் ஏற்றி மாலையில் 11 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டன.

இதுமட்டுமின்றி வானில் வர்ணஜாலத்தை ஏற்படுத்தும் வகையில் 2,100 டிரோன்கள் மூலம் கடவுளின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தசாஷ்வமேத் காட் உள்ளிட்ட இடங்களில் கங்கா ஆரத்தி காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதனைக் காண அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காசியில் குவிந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Summary

The banks of the Ganges in Kashi illuminated by 1.1 million lamps and 2,100 drones

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.