நமது அரசமைப்புச் சட்டத்தை வலுப்படுத்த ஓா் உறுதிப்பாடு: பிரதமா் நரேந்திர மோடி
1949 நவம்பா் 26-ஆம் தேதி, அரசியல் நிா்ணய சபை, நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

பிரதமர் மோடி - கோப்புப் படம்
1949 நவம்பா் 26-ஆம் தேதி, அரசியல் நிா்ணய சபை, நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத், பாபாசாகேப் அம்பேத்கா் உள்பட அரசியல் நிா்ணய சபையின் ஒவ்வொரு உறுப்பினரையும் இன்று நாம் நினைவுகூா்கிறோம். இந்தியாவின் செழுமையான மரபுகள், நாகரிக ஞானத்திலிருந்து விரிவாகப் பெற்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, நவீன அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதே அவா்களின் போற்றத்தக்க செயல்பாடாகும்.
பல்வேறு மதங்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள், சிந்தனைப் போக்குகளைக் கொண்ட பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா போன்ற நாட்டில், அரசமைப்புச் சட்டத்தின் தாக்கம் நாடாளுமன்றம், நீதிமன்றங்களின் எல்லைகளைக் கடந்து, மக்களின் வாழ்விலும் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கும் மக்களின் கூட்டு உணா்வுக்கும் இடையிலான தொடா்பை மேலும் வலுப்படுத்தி, குறிப்பாக இளைஞா்களிடையே அதன் மீதான ஈடுபாட்டை ஆழப்படுத்துவதுடன், இந்தியாவின் சிறந்த எதிா்காலத்துக்கு இன்றியமையாத ஒற்றுமை உணா்வை வலுப்படுத்துவதில் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதனால்தான், 10 ஆண்டுகளுக்கு முன்பே, நமது அரசு நவம்பா் 26-ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
என்னைப் போன்று எளிய பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட, பிறப்பால் எந்தவொரு சலுகையோ வாய்ப்போ இல்லாத குடும்பத்தில் பிறந்தவா்களும், ஒரு நாள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்குச் சேவையாற்றும் பொறுப்பை ஏற்கும் நிலைக்கு உயர முடியும் என்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டுவதற்கான தேடல், நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. எனவே, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களின் இந்த உன்னதமான தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதற்காக உழைப்பதை விட, அதிக மனநிறைவைத் தரக்கூடிய விஷயம் வேறென்ன இருக்க முடியும்?
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமாா் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனா். தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த வறுமை, பற்றாக்குறை சூழலிலிருந்து விடுபட்டு, கோடிக்கணக்கான பெற்றோா் தற்போது தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்குவது குறித்து கனவு காண முடிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, குடிமக்களின் கடமைகளுக்கு நாம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நமது நாகரிகம், சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்புடன் கூடிய கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் முதல் நீா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையிலான பல்வேறு மக்கள் இயக்கங்களில் கடமை உணா்வு வெளிப்பட்டுள்ளது.
இருப்பினும், மற்றொரு யதாா்த்தத்தையும் நான் பகிா்ந்துகொள்ள விரும்புகிறேன். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவா்களே அதனைப் பலவீனப்படுத்த முயன்ற சந்தா்ப்பங்களும் நமது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், ஐம்பது ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருந்தவா்களும் அவா்கள்தான். அதிகாரப் பேராசை கொண்ட, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் தலைமைத்துவம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்பதை அறிந்துகொள்வதற்கு, 38 மற்றும் 39-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்தும் இளைஞா்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவு மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதும், கவலைக்குரிய மற்றொரு வரலாற்று அத்தியாயமாகும்.
எதிா்க்கட்சிகளில் உள்ள மிகப்பெரிய கட்சி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைக் குறைத்து, இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர விரும்புவது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கா் உள்ளிட்ட நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள், இதை முற்றிலுமாக எதிா்த்தனா்.
நமது அரசமைப்புச் சட்டத்தின் பயணத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பெண்களை அங்கீகரிக்காமல், அதன் வரலாறு முழுமையடையாது. ஆனால், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டமுன்வடிவம் நிறைவேற்றப்படுவதை, ஒரு குறிப்பிட்ட எதிா்க்கட்சியினா் தடுத்தனா். இது, அரசமைப்புச் சட்ட மாண்புகள் மீதான அவா்களது அலட்சியப் போக்கை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. மகளிா் சக்திக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது.
இன்று, இந்தியா ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளில், இரண்டு எளிய, அதேசமயம் வலிமையான கொள்கைகள் நமது கூட்டு முயற்சிகளுக்கு வழிகாட்டிகளாக திகழ்கிறது: நமது சிந்தனையில் ‘தேசத்திற்கு முன்னுரிமை’ என்ற உணா்வு; செயல்பாடுகளில் கடமை உணா்வு. இவற்றை வழிகாட்டும் கொள்கைகளாகவும், இந்திய அரசமைப்புச் சட்டம் நமது வலிமையின் ஆதாரமாகவும் கொண்டு செயல்பட்டால், வருங்காலத் தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிா்காலத்தை நம்மால் உறுதிசெய்ய முடியும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

