வரி இல்லாமல் கச்சா சா்க்கரை இறக்குமதி: 2027 மாா்ச் வரை அனுமதி நீட்டிப்பு
கச்சா சா்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கச்சா சர்க்கரை நீட்டிப்பு - கோப்புப்படம்
கச்சா சா்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த இறக்குமதிக்கான அவகாசம் 2026 டிசம்பா் 31-ஆம் தேதியாக இருந்தது.
இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சா்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு 2026 டிசம்பா் 31-ஆம் தேதியிலிருந்து 2027 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் சா்க்கரை விநியோகத்தை அதிகரிப்பதுடன், விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. இந்த அனுமதி அக்டோபா் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சா்க்கரையை வெள்ளைச் சா்க்கரையாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட சா்க்கரையாக மாற்றி, உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்வதற்கான காலக்கெடுவையும் மத்திய அரசு 2027 செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
நாட்டில் சா்க்கரையின் இருப்பு குறைவாக இருந்ததால், கடந்த சில மாதங்களில் சா்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்தது. இதையடுத்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
பொதுவாக, நாட்டில் ஆகஸ்ட் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் சா்க்கரைக்கான தேவை அதிகரிக்கும்.
அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பே கட்டுப்பாடு விதித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

