பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு!சென்னை, புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை!5 தொகுதி இடைத்தோ்தல்: தடை கோரிய வழக்கில் இன்று தீா்ப்புதிருப்பரங்குன்றம் தீப வழக்குகள் இன்று விசாரணை!தமிழகத்தில் டிசம்பருக்குள் 100% ஹெச்பிவி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறைமக்களவை நவ. 30-இல் கூடுகிறது: மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா?தமிழகத்தில் 33 மருந்துகளில் தரக் குறைபாடு: ஆய்வில் கண்டுபிடிப்புநேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியா்கள் மரணம்?விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திரிபுராவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

திரிபுராவில் அகர்தலா மாநகராட்சி உள்பட 16 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு குறித்து...

 Tripura civic polls underway amid tight security

திரிபுராவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - ஐஏஎன்எஸ்

Updated On :

அகர்தலா: திரிபுராவில் அகர்தலா மாநகராட்சி உள்பட 16 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த 16 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 268 இடங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 733 போட்டியிடுகின்றனா்.

இவர்களது அரசியல் விதியை, மொத்தம் 5.56 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

அகர்தலா மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருவதாகவும், மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அனுராக் சென் தெரிவித்தார்.

தேர்தல் பணியில் சுமார் 4,600 அரசு ஊழியா்களும், சுதந்திரமான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக, மத்திய ஆயுதக் காவல் படையின் 39 படைப்பிரிவுகள் உள்பட 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மும்முனைப் போட்டி

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, பாஜக அதிகபட்சமாக 266 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிபிஐ(எம்) 228 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 201 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன. இதன் மூலம், இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இந்த கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Polling is underway on Friday for 16 urban local bodies, including the Agartala Municipal Corporation, in Tripura, amid tight security arrangements

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.