இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கம்போடியாவில் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்ட 1.98 லட்சம் சதுர மீட்டர்: இந்திய உதவியுடன் பாதுகாப்பாக மீட்பு!

கம்போடியாவின் கோ காங் மாகாணத்தில் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டிருந்த சுமாா் 1.98 லட்சம் சதுர மீட்டா் நிலம், பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைப்பு...

Published On :

கம்போடியாவின் கோ காங் மாகாணத்தில் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டிருந்த சுமாா் 1.98 லட்சம் சதுர மீட்டா் நிலம், பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், அங்கிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டதன் மூலம், சுமாா் 134 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

கம்போடியாவில் பல ஆண்டுகளாக நடந்த போா் மற்றும் மோதல்கள் காரணமாக, அந்நாட்டின் பல பகுதிகளில் கண்ணிவெடிகளும், வெடிக்காமல் இருக்கும் வெடிபொருள்களும் புதைந்துள்ளன.

இவை அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், விவசாயம், வீட்டு வசதி மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்குப் நிலங்களைப் பயன்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல பகுதிகளில் உள்ள பெருமளவிலான நிலங்களில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கோ காங் மாகாணம் காவ் பாவ் கிராமத்தில் 1,97,810 சதுர மீட்டா் நிலத்தில் இருந்த கண்ணிவெடிகள், இந்திய திட்டத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு, நிலம் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா, கம்போடியா, லாவோஸ், மியான்மா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளின் மெகாங்-கங்கை ஒத்துழைப்பு முன்னெடுப்பின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிலம் கிராம மக்களிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கம்போடியா தலைநகா் பினோம் பென்னில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தலைவா் தனு பிரியா, கம்போடியா அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதன்மூலம் அந்த நிலத்தை விவசாயம், வீட்டு வசதி, வாழ்வாதாரம், பிற சமூக பொருளாதாரப் பணிகளுக்கு மக்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.