அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

கைதி மனைவியிடம் தகாத உறவு, ரூ.20 லட்சம் லஞ்சம்! போலி தீர்ப்பு நகல் மூலம் கைதியை விடுவித்த டிஐஜி கைது!!

கைதி மனைவியிடம் தகாத உறவு, அவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்று போலி தீர்ப்பு நகல் மூலம் கைதியை விடுவித்த டிஐஜி கைது செய்யப்பட்டார்.

<P>Deputy Inspector General (DIG) of Prisons (North Range) M. Somashekar was arrested by the Parappana Agrahara police on Sunday for allegedly assisti

டிஐஜி சோமசேகர் - file photo

Published On :

கர்நாடக மாநிலத்தில், காவல்துறையில் நடந்தேறிய மிகப்பெரிய முறைகேடு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைதியின் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டு, அவரிடமே ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியான தீர்ப்பு நகலை வைத்து கைதியை விடுதலை செய்த வழக்கில் டிஐஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலை வழக்குக் குற்றவாளி ஷங்கரை 2018ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்தது போன்று போலியான தீர்ப்பு நகலை சமர்ப்பித்து, விடுதலை செய்த வழக்கில், கலாபுராகி மண்டல சிறைத் துறை டிஐஜியாக இருந்த சோமசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறையில் பணியாற்றி வரும் மற்றொரு அதிகாரியால் கொடுக்கப்பட்ட புகாரின் கீழ் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நடத்தப்பட்டு, போலி தீர்ப்பு நகல் தயாரிக்கப்பட்டு, சிறை அதிகாரி விடுதலை செய்யப்பட்டது உண்மை என்று கண்டறியப்பட்டது.

உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருந்த ஷங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைதி ஷங்கரின் மனைவியையும் டிஐஜி சோமசேகர் பாலியல் ரீதியாக துன்புறத்தியதாகவும், சட்டத்துக்கு விரோதமாக விடுதலை செய்ய ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பரோலில் சென்று தலைமறைவான ஷங்கருக்கு சட்டத்தை மீறி சோமசேகர் மூன்று முறை பரோல் வழங்கி உத்தரவிட்டதும் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு, கைதியின் குடும்பத்தினரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு போலியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை தயாரித்திருப்பதும், கைதியின் மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

Illicit affair with prisoner's wife, ₹20 lakh bribe! DIG arrested for releasing prisoner using a fake judgment copy!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.