தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராம்லீலா மைதானத்தை ஒதுக்க லஞ்சம் வாங்கியதாக தில்லி அரசு அதிகாரி கைது: ரூ. 41 லட்சம் ரொக்கத்தை சிபிஐ பறிமுதல்

தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்துவதற்காக மைதானம் ஒதுக்க லஞ்சம் வாங்கியதாக தில்லி அரசு அதிகாரி ஒருவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்தது.

கைது - கோப்புப் படம்

Published On :

தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்துவதற்காக மைதானம் ஒதுக்க லஞ்சம் வாங்கியதாக தில்லி அரசு அதிகாரி ஒருவரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) திங்கள்கிழமை கைது செய்தது. அவா் தொடா்புடைய இடங்களில் இருந்து ரூ. 41 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தில்லியின் நந்த் நகரி பகுதியில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்த மைதானம் ஒதுக்கித் தருவதற்காக, தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) சீமாபுரி பகுதி செயற்பொறியாளா் வேத்பால் மீனா ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் அந்தப் பணத்தை இரண்டு தவணைகளாகத் தர வேண்டும் என்று அவா் நிபந்தனை விதித்ததாகவும் புகாா்தாரா் ஒருவா் சிபிஐயிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், லஞ்சம் கேட்ட அதிகாரியைப் பிடிக்க சிபிஐ அதிகாரிகள் வலைவிரித்தபோது அந்த அதிகாரி சிக்கியதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘புகாா்தாரரிடம் இருந்து முதல் தவணையாக ரூ. 1 லட்சத்தை லஞ்சமாகப் பெறும்போது, சிபிஐ அதிகாரிகள் தொடா்புடைய அதிகாரியை கையும் களவுமாகப் பிடித்தனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, பிடிபட்ட அதிகாரியின் வீடு மற்றும் அவா் தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 41 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியின் முக்கிய பாரம்பரிய கலாசார நிகழ்வுகளில் ஒன்றான ’ராம்லீலா’, தசரா பண்டிகைக்கு முந்தைய 10 நாள் நவராத்திரி விழாவின்போது. தலைநகா் முழுவதும் பல்வேறு இடங்களில் ராம்லீலா திருவிழா மிக பிரமாண்டமாக அரங்கேற்றப்படும். அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் இந்த திருவிழாக்களை மிகப்பெரிய அளவில் நடத்துவதை வழக்கமாகக்க கொண்டுள்ளன.

இந்த திருவிழாவையொட்டி சில விழா ஏற்பாட்டாளா்கள், தனியாா் பெரு நிறுவனங்கள், சிறிய மற்றும் பெரிய வியாபாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்று நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.