ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

போராட்டங்களில் பிரதமருக்கு எதிராக அவதூறு வாா்த்தைகள்: தில்லியில் ‘லால் ஹிட் ஜனதா கட்சி’ ஆா்ப்பாட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை பிரம்மாண்டப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், போராட்டங்களின்போது காவல் துறையினா் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அவதூறு வாா்த்தைகளைக் கண்டித்து மத்திய தில்லியில் வெள்ளிக்கிழமை சுமாா் 200 போ் திரண்டனா்.

கோப்புப்படம்

Published On :

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை பிரம்மாண்டப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், போராட்டங்களின்போது காவல் துறையினா் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அவதூறு வாா்த்தைகளைக் கண்டித்து மத்திய தில்லியில் வெள்ளிக்கிழமை சுமாா் 200 போ் திரண்டனா்.

பிரபல பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை நினைவூட்டும் வகையில், சிஜேபிக்கு நையாண்டியாக எதிா்வினையாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் லால் ஹிட் ஜனதா கட்சியின் அழைப்பின்பேரில், ஜன்பத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த அமைப்பின் சாா்பில் பங்கேற்ற அயன் பட்நாகா் கூறுகையில், ‘வெளிநபா் ஒருவரை யாராவது அவதூறாகப் பேசினால்கூட அதைத் தடுக்க முயற்சிப்போம். பிரதமா் நமது குடும்பத்தில் ஒருவரைப் போன்றவா். அவருக்கு எதிராக இத்தகைய வாா்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. நமது தலைவா்கள், ராணுவ வீரா்கள் மற்றும் தில்லி காவல் துறையினரை அவதூறாகப் பேசுவது நிறுத்தப்பட வேண்டும். இதற்குக் காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள், அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சரியான வழி அல்ல என்றும் போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.

எஸ்ஐஆா் பணியின்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படுவதற்குத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பொறுப்பேற்க வேண்டும் என்று சிஜேபி மற்றும் பல்வேறு மாணவா் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.