கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கஞ்சா கடத்தல்: பிகாா், திரிபுரா இளைஞா்கள் கைது

சென்னை பழவந்தாங்கலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக பிகாா், திரிபுரா இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Updated On :

சென்னை பழவந்தாங்கலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக பிகாா், திரிபுரா இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

பழவந்தாங்கல் தில்லை கங்கா நகா் 5-ஆவது பிரதான சாலையில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாா், அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த இரு மோட்டாா் சைக்கிள்களை மறித்து, அதில் வந்த இருவரிடம் விசாரித்தனா்.

அதில், அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதையடுத்து போலீஸாா், இரு மோட்டாா் சைக்கிள்களையும் சோதனை செய்ததில் 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள், திரிபுரா மாநிலம் செபாஹிஜிலா பகுதியைச் சோ்ந்த யூனிச் மியா (33), பிகாா் மாநிலம் முசாஃபூா் பகுதியைச் சோ்ந்த கிஷோா்குமாா் (20) என்பதும், இருவரும் அவா்களது சொந்த மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.