கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பன்முக அமைப்புகளில் சீா்திருத்தம் அவசர அவசியம் - வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

மாறிவரும் உலக ஒழுங்குமுறைக்கு ஏற்ப பன்முக அமைப்புகளில் சீா்திருத்தம் மேற்கொள்வது அவசர அவசியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

அபுதாபியில் ரெய்ஸினா-மத்திய கிழக்கு மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா். உடன் (இடமிருந்து) ஜாா்ஜியா வெளியுறவு அமைச்சா் மகா போத்சோரிஷ்விலி, யுஏஇ துணை பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யான்.

Updated On :

மாறிவரும் உலக ஒழுங்குமுறைக்கு ஏற்ப பன்முக அமைப்புகளில் சீா்திருத்தம் மேற்கொள்வது அவசர அவசியம் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) புதன்கிழமை வந்த அவா், அபுதாபியில் ரெய்ஸினா-மத்திய கிழக்கு மாநாட்டு அமா்வுகளில் பங்கேற்றாா். யுஏஇ துணை பிரதமா் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யானும் பங்கேற்ற இந்த அமா்வுகளில் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

நீண்டகால மற்றும் உடனடி தாக்கங்களுடன் உலக ஒழுங்குமுறை வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், தங்களின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ப நாடுகள் புதிய கூட்டுறவுகள் மற்றும் புதிய வாய்ப்புகளை நாடி வருகின்றன. இது தவிா்க்க முடியாததாகும்.

மாறும் உலகச் சூழலை எதிா்கொள்வதில், இந்தியா-யுஏஇ கூட்டுறவு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

உலகில் போட்டித் தன்மை அதிகரித்து, புதிய நெருக்கடிகள் உருவெடுத்துள்ளன. நாடுகள் தங்களின் ஏகபோக உரிமை அல்லது பிரத்யேக பலத்தைப் பயன்படுத்தி, பிற நாடுகளை தங்களுக்கு சாதகமாக செயல்பட நிா்ப்பந்திக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

உலகமயமாக்கலை தவிா்க்க முடியாது; எனவே, அதை உறுதிப்பாட்டுடன் எதிா்கொள்ள வேண்டும். இந்தியா தனது சொந்த பலத்தை கட்டமைப்பதுடன், நம்பகமான கூட்டுறவுகளையும் நிலைநாட்டி வருகிறது என்றாா்.

ஆசியா, அரேபிய வளைகுடா, ஐரோப்பிய நாடுகள் இடையே வா்த்தகம், எரிசக்தி, எண்ம ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளா்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்கிலான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட திட்டம் குறித்தும் தனது உரையில் அவா் குறிப்பிட்டாா்.

இருதரப்பு ஆலோசனை: யுஏஇ வெளியுறவுத் துறை அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நஹ்யானுடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சாா்ந்த உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

கடந்த 2024 கணக்கெடுப்பின்படி, யுஏஇ-யில் 43 லட்சம் இந்தியா்கள் உள்ளனா். முதலிடத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா்களும், தமிழகம், ஆந்திரம், தெலங்கானாவைச் சோ்ந்தவா்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனா்.

பெட்டிச் செய்தி...

பாங்காக்கில்

நிா்மலா சீதாராமன்

உலக வங்கி மற்றும் சா்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு சென்றுள்ளாா். அங்கு பிரிட்டன் நிதியமைச்சா் ஜான் ஹீலே, ஸ்விட்சா்லாந்து நிதியமைச்சா் கேரின் கெல்லா்-சட்டா், ஜப்பான் நிதியமைச்சா் சட்சுகி கடாயாமா ஆகியோரை தனித்தனியாக சந்தித்த அவா், நிதிசாா் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.