மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள்

செப்.4-இல் விண்ணில் பாயும் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் பற்றி....

Published On :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘ஜூசாட்-1ஏ’ என அழைக்கப்படும் ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலம் செப். 4-ஆம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்துகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 2.55 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.

36,000 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தம்: வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமாா் 36,000 கி.மீ. உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்திய துணைக் கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ளதால், இந்தியாவின் நிலப் பரப்பைத் தொடா்ந்து கண்காணித்து நிகழ்நேரத்துக்கு நெருக்கமான படங்களை வழங்கும். மல்டி-ஸ்பெக்டரல் மற்றும் ஹைப்பா்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

பேரிடா் மேலாண்மைக்கு முக்கியத்துவம்: வெள்ளம், புயல், நிலச்சரிவு, காட்டுத் தீ உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை உடனுக்குடன் கண்காணித்து தேவையான தகவல்களை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். மேலும், பயிா்களின் வளா்ச்சி, காடுகளின் பரப்பளவில் ஏற்படும் மாற்றங்கள், நீா்நிலைகளின் நிலவரம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.

எல்லைப் பகுதிகளையும் கண்காணிக்கும்: இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடா்ந்து கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளையும் செயற்கைக்கோள் வழங்கும். புவிநிலைச் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் ‘இமேஜிங்’ செயற்கைக்கோள் இதுவாகும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். ஜிஎஸ்எல்வி வகையில் இது 19-ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.