சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மகளின் பேச்சால் பதவி பறிப்பு? தெலங்கானா அமைச்சரவையில் இருந்து கொண்டா சுரேகா நீக்கம்!

தெலங்கானா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் கொண்டா சுரேகா நீக்கப்பட்டுள்ளது குறித்து...

Konda Surekha from the Telangana cabinet

தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா - ENS

Updated On :

தெலங்கானா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் கொண்டா சுரேகா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கொண்டா சுரேகா உடனடி நடவடிக்கையாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக, வியாழக்கிழமை (செப். 3) அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடனான ஆலோசனைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், அமைச்சர் சுரேகாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி தெலங்கானா ஆளுநருக்கு முறைப்படி பரிந்துரைத்துள்ள நிலையில், தில்லி சென்றுள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று மாலை ஹைதராபாத் வருவதற்குள் சுரேகாவின் பதவி நீக்கம் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமைச்சர் சுரேகாவின் மகளும் காங்கிரஸ் உறுப்பினருமான சுஷ்மிதா கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரின் சகோதரர் ஜி சின்னா ரெட்டி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 18 அமைச்சர்களில் வெறும் 2 பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த தெலங்கானா அமைச்சரவையில் இருந்து கொண்டா சுரேகா நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, சுஷ்மிதா கடந்த 2025 ஆம் ஆண்டு முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இம்முறை அவரது தாயாரும் அமைச்சருமான சுரேகாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Minister Konda Surekha has been removed from the Telangana Cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.