
சட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!
சட்டவிரோதமாக சீரமைப்புப் பணிகள் நடந்து வந்ததே 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததா என்பது குறித்து

தெற்கு தில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான 5 மாடி தனியார் விடுதி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.
தில்லியின் தங்கும் விடுதியின் கீழ்தளத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை இருந்ததால், அதனை சரி செய்யும் பணி சட்டவிரோதமாக நடைபெற்று வந்துள்ளதும் விடுதிக் கட்டடம் இடிந்து விழக் காரணங்களாகக் கருதப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், அஸ்திவராத் தூண்கள் அமைக்கப்படாமல் இருந்துள்ளதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மேலும், கட்டடத்தின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்ததும் அங்கு சட்டவிரோதமாக சீரமைப்புப் பணி நடைபெற்றதுமே, கட்டடத்தின் அஸ்திவாரம் பலவீனமடைந்து, இடிந்து விழுந்துள்ளது. இதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஆண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது.
கட்டட இடிபாடுகளில் இருந்து 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம், அருகே உள்ள சத்ய நிகேதன் மிகவும் நெரிசலான பகுதி. இங்குள்ள கல்லுரிகளில் பயிலும் கேரளம், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை மையமாகக் கொண்டு இப்பகுதியில் உள்ள பல தங்கும் விடுதிகள் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






