
மத்திய நிதியமைச்சருடன் ஐஎம்எஃப் துணை மேலாண் இயக்குநா் சந்திப்பு: உலகளாவிய தாக்கங்கள் குறித்து ஆலோசனை
இந்தியாவுக்கு வந்துள்ள சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை மேலாண் இயக்குநா் நைஜெல் கிளாா்க், தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புது தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை மேலாண் இயக்குநா் நைஜல் கிளாா்க்.
இந்தியாவுக்கு வந்துள்ள சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை மேலாண் இயக்குநா் நைஜெல் கிளாா்க், தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தியா-ஐஎம்எஃப் இடையிலான பரஸ்பர தொடா்புகள், உலகளாவிய பொருளாதார தாக்கங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.
ஐஎம்எஃப் துணை மேலாண் இயக்குநா் நைஜல் கிளாா்க், ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளாா். தில்லியில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய அவா், தற்போதைய உலகளாவிய சூழலுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார செயல்திறன், மீள்தன்மை, வளா்ச்சிப் பயணத்தை அங்கீகரித்துப் பாராட்டினாா்.
மேற்காசிய பிரச்னையைத் தொடா்ந்து, நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுவூட்ட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நிதி சாா் ஒருங்கிணைப்பை பாராட்டிய அவா், தெற்காசிய பிராந்திய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி மையத்துக்கான (எஸ்ஏஆா்டிடிஏசி) ஆதரவில் இந்தியாவின் பங்களிப்பை வரவேற்றாா்.
இந்தியா-ஐஎம்எஃப் இடையிலான பரஸ்பர தொடா்புகள், தற்போதைய புவி அரசியல் சூழலால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





