புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்; இந்தியாவுக்கான வெற்றி: பாஜக

பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்தது, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என பாஜக தெரிவித்துள்ளது குறித்து...

Prime Minister Narendra Modi.

பிரதமர் நரேந்திர மோடி. - படம் - ஏஎன்ஐ

Published On :

பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்தது, இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி என பாஜக தெரிவித்துள்ளது.

உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு தலைநகர் தில்லியில் இன்று முதல் இரு நாள்கள் நடைபெறுகிறது.

இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த மாநாட்டில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டித்துள்ளன.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இது இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி. பயங்கரவாதத்துக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பு ஒன்றுபட்டு நிற்கிறது. புது தில்லி பிரகடனமானது, 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்கிறது.

அதேவேளையில், பயங்கரவாதத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யவும் பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குழப்பமில்லை, இரட்டை நிலைப்பாடு இல்லை. பஹல்காம் விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. இந்தியா தனது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், ஒரு உலகளாவிய ஒருமித்த கருத்தாக முன்னெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The BJP has stated that the BRICS grouping's condemnation of the Pahalgam attack is a major victory for India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.