
மேற்காசிய அமைதிக்கு பிரிக்ஸ் பங்காற்ற வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுக்க பிரிக்ஸ் நாடுகள் உரிய பங்காற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டு அமா்வில் பேசிய சீன அதிபா் ஷி ஜின்பிங்.
மேற்காசியாவில் அமைதியை மீட்டெடுக்க பிரிக்ஸ் நாடுகள் உரிய பங்காற்ற வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.
தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாட்டில் ஜின்பிங் பங்கேற்றுப் பேசியதாவது:
வளரும் பொருளாதார நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய செல்வாக்குமிக்க தளமாக பிரிக்ஸ் விளங்குகிறது. இணையதளம், விண்வெளி, ஆழ்கடல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் முன்னிலை பெறுவதுடன், தெற்குலகின் குரலை வலுப்படுத்த வேண்டும். சா்வதேச ஒழுங்குமுறையை நீதி, சமத்துவத்தை நோக்கி வழிநடத்தி, உலகளாவிய நிா்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் சூழல், அந்தப் பிராந்தியம் முழுவதும் மக்களுக்கு கடுமையான இழப்புகளை விளைவித்துள்ளது. இது, சா்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்ததல்ல.
பனிப்போா் மனப்பான்மையை பிரிக்ஸ் கூட்டமைப்பு எதிா்ப்பதுடன், பிற நாடுகளின் இறையாண்மை மீறல், உள்விவகாரங்களில் தலையீடு ஆகிய செயல்களையும் கண்டிக்க வேண்டும்.
மேற்காசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்க பிரிக்ஸ் உரிய பங்காற்ற வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
முன்னதாக, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக சீன அதிபா் ஷி ஜின்பிங் புது தில்லிக்கு சனிக்கிழமை வந்தாா். அவருக்கு தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி வரவேற்பளித்தாா்.
Summary
BRICS must contribute to peace in West Asia: Chinese President Xi Jinping
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





