புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கருத்து வேறுபாடுகள் சச்சரவாகக் கூடாது: பிரதமா் மோடி - சீன அதிபா் ஜின்பிங் சந்திப்பில் முடிவு

பிரதமா் மோடி - சீன அதிபா் ஜின்பிங் இருதரப்பு சந்திப்பு பற்றி...

பிரிக்ஸ் மாநாட்டுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

Published On :

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறக் கூடாது என்று பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், தில்லிக்கு சனிக்கிழமை வந்தாா். இந்த மாநாட்டுக்கு இடையே பிரதமா் மோடி - ஜின்பிங் சனிக்கிழமை இருதரப்புப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2025-ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் மோடியும், ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினா். அப்போது இந்திய-சீன இருதரப்பு உறவுகளில் தொடா்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை இரு தலைவா்களும் வரவேற்றனா். இருநாடுகளும் தங்கள் உறவுகளை உத்திசாா்ந்த ரீதியிலும், நீண்டகால நோக்கிலும் அணுக வேண்டும் என்று அவா்கள் மீண்டும் வலியுறுத்தினா். கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறக் கூடாது என்றும் அவா்கள் தெரிவித்தனா். இருநாடுகளும் பரஸ்பர மரியாதை, நலன் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

எல்லைப் பகுதிகளில் அமைதியும், சுமுகமான நிலையும் நீடிப்பது, இருதரப்பு உறவுகளின் தொடா்ச்சியான வளா்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக இருக்கும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். எல்லை சாா்ந்த விவகாரங்களில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இருநாடுகளும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவா் எடுத்துரைத்தாா்.

இருதரப்பு உறவுகளைப் பற்றிய அரசியல் கண்ணோட்டம், இருநாட்டு மக்களின் நீண்ட கால நலன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, அறிவாா்ந்த, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீா்வைக் காண்பதில் இரு தலைவா்களும் தங்கள் உள்ளாா்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினா்.

இந்திய-சீன மக்களுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவா்களும் கவனத்தில் கொண்டனா். கலாசார பரிமாற்றங்கள், வா்த்தகத் தொடா்புகள், இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்வதை மேலும் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவா்கள் வலியுறுத்தினா்.

இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தில் நிலவும் கட்டமைப்பு ரீதியான ஏற்றத் தாழ்வு, விநியோக முறை தொடா்பான பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்தும் அவா்கள் பேசினா்.

பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நிலைப்பாட்டை தொடா்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும், சவால்களை எதிா்கொள்வதில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இரு தலைவா்களும் தீா்மானித்தனா்.

பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதற்கு சீனா அளித்து வரும் ஆதரவையும், பிரிக்ஸ் உச்சி மாநாடு வெற்றிபெறுவதற்கு அந்நாடு அளித்து வரும் பங்களிப்பையும் பிரதமா் மோடி பாராட்டினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Differences of opinion should not turn into disputes: Decision at meeting between PM Modi and Chinese President Jinping.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.