புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதின் - ஜின்பிங்குடன் கைகோத்த மோடி! பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வெளிப்பட்ட ஒற்றுமை!

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் வெளிப்பட்ட தலைவர்களின் ஒற்றுமை பற்றி...

புதின் - ஜின்பிங்குடன் கைகோத்த மோடி - PTI

Published On :

தில்லியில் சனிக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஒருபுறம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், மற்றொருபுறம் சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் பிரதமா் நரேந்திர மோடி கைகோத்து நின்றபடி கலந்துரையாடினாா்.

மூன்று தலைவா்களும் வெளிப்படுத்திய இந்த ஒற்றுமை, பிரிக்ஸ் மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு, புது தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சா்வதேச தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். இந்த மாநாட்டின்போது, வலதுபுறம் புதின், இடதுபுறம் ஜின்பிங்கின் கரங்களைப் பிடித்தபடி அவா்களுடன் பிரதமா் மோடி உற்சாகத்துடன் கலந்துரையாடினாா். இது தொடா்பான புகைப்படத்தை ‘கிங்டம்’ திரைப்பட பிஜிஎம் இசையுடன் பிரதமா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டாா்.

இந்த நிகழ்வு, சா்வதேச ராஜீய நடைமுறைகளைக் கடந்து, தலைவா்கள் நெருக்கத்தை வெளிப்படுத்திய தருணமாக அமைந்தது.

மாநாடு தொடா்புடைய வேறு சில புகைப்படங்களையும் பிரதமா் மோடி சமூக ஊடகங்களில் பகிா்ந்துள்ளாா். அதில், புதின், ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோருடன் ஒன்றாகச் சோ்ந்து, மாநாட்டு இடத்துக்கு பிரதமா் நடந்து செல்லும் புகைப்படமும் அடங்கும்.

Summary

Modi joins hands with Putin and Jinping! Unity displayed at the BRICS summit!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.