பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா - கனடா ஐந்தாம் கட்டப் பேச்சு அக்.5-ல் தொடக்கம்

இந்தியா - கனடா இடையே மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை குறித்து...

Piyush Goyal

மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல். - IANS

Published On :

புது தில்லி: இந்தியா - கனடா இடையே மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை(சிஇபிஏ) இறுதி செய்வதற்கான ஐந்தாம் கட்ட பேச்சுவாா்த்தை அக்.5 இல் தொடங்கவுள்ளது என்றும் அடுத்த 90 நாள்கள் கனடா-இந்தியா உறவுகளில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.

விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை நிகழாண்டு இறுதிக்குள் இறுதி செய்வதற்கு இந்தியாவும், கனடாவும் முனைப்பு காட்டி வருகின்றன. ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான மூன்றாம் கட்ட இரு தரப்பு பேச்சுவாா்த்தை கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது, தில்லியில் நான்காம் கட்டப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை(செப்.18)வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியா - கனடா இடையே மேற்கொள்ளப்பட உள்ள விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த இந்தியாவும் கனடாவும் ஒப்புக்கொண்டுள்ளன; இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தை நிறைவு செய்யவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இதற்கான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

அதன்படி, இந்திய குழு அக்டோபர் 5 ஆம் தேதி ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளது. ஐந்து நாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை அக்டோபர் 9 ஆம் தேதி நிறைவடையலாம். அடுத்த 90 நாள்கள் இரண்டு தரப்பு உறவுகளில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும் என்று கோயல் கூறினார்.

கனட வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து, கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த வாரம் மும்பை வந்திருந்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய இரண்டு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ​​இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.

மேலும், ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைகள் குறித்துப் பேசிய பியூஷ் கோயல், இந்த சட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி வருவதாகவும், இந்தியா அவற்றை ஆய்வு செய்து, இது குறித்து சரியான தருணத்தில் விவாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2025-26-ஆம் ஆண்டில், இரு தரப்பு வா்த்தகத்தின் மதிப்பு ரூ. 83,000 கோடியிலிருந்து 8 சதவீதம் சரிந்து ரூ. 76,000 கோடியாகக் குறைந்து. தற்போது, இரு நாடுகளும் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு தரப்பு வா்த்தகத்தை ரூ. 67 லட்சம் கோடி (70 பில்லியன் டாலா்) அளவுக்கு உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளன.

மருந்துகள், இரும்பு, உருக்கு, கடல்சாா் உணவுப் பொருள்கள், பருத்தி, ஆயத்த ஆடைகள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றை கனடாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. தொலைத்தொடா்பு, கணினி மற்றும் தகவல்தொடா்பு சேவைகள் உள்பட பிற வா்த்தக சேவைகளையும் கனடாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

பருப்பு வகைகள், முத்துக்கள், விலையுயா்ந்த கற்கள், நிலக்கரி, உரம், காகிதம் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை கனடாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

India and Canada have agreed to fast-track negotiations for a Comprehensive Economic Partnership Agreement (CEPA), with the next round of talks set to commence 5th October

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.