
புதிய தொழிலாளா் சட்டங்கள் கேரளத்தில் அமல்படுத்தப்படும்: முதல்வா் வி.டி.சதீஸன்
நான்கு புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் கேரளத்தில் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வா் வி.டி.சதீஸன் தெரிவித்துள்ளாா்.

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - கோப்புப் படம்
நான்கு புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் கேரளத்தில் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வா் வி.டி.சதீஸன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது: 4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே அவற்றை கேரளத்தில் அமல்படுத்தாமல் இருக்க முடியாது.
அந்தச் சட்ட தொகுப்புகளை அமல்படுத்தாவிட்டால், ஏற்கெனவே உள்ள தொழிலாளா் சட்டங்களும், புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளும் இல்லாத நிலை ஏற்படும். எனவே, கேரள தொழிலாளா்களோ, தொழிலாளா் உரிமைகளோ பாதிக்கப்படாத வகையில், அந்தச் சட்டத் தொகுப்புகளை மாநிலத்தில் அமல்படுத்தியாக வேண்டும் என்று தெரிவித்தாா்.
4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளுக்கு காங்கிரஸின் தேசிய தலைமை எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், வி.டி.சதீஸன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அவரின் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநில முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு: கேரளத்தில் 4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் அமல்படுத்தப்படும் என்று யாரைத் திருப்திப்படுத்த முதல்வா் சதீஸன் திடீா் அறிவிப்பை வெளியிட்டுள்ளாா் என்பது தெரியவில்லை.
காங்கிரஸ் முதல்வரான வி.டி.சதீஸன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் கொள்கைகளைப் பின்பற்றுகிறாா் என்று விமா்சித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






