மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

கேரள ஓணம் பம்பர் லாட்டரி! முதல் பரிசு ரூ.30 கோடி! டிக்கெட் விலை?

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் விலை பற்றி...

கேரளம் : பாத்திரம் கழுவும் தொழிலாளிக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு

கேரள ஓணம் பம்பர் லாட்டரி

Published On :

கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் 2026 லாட்டரி டிக்கெட் முற்றிலும் விற்றுத் தீர்ந்து, அதன் குலுக்கல் முடிவுகளுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், விரைவில் குலுக்கல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.

பல நாள்கள் காத்திருப்பு ஏறக்குறைய முடிவுக்கு வரவிருக்கிறது. கேரளத்தின் மிகப்பெரிய லாட்டரி பரிசான ரூ.30 கோடியை வெல்லப்போவது யார் என்ற தகவல் இன்று மதியம் நடைபெறும் குலுக்கலில் தீர்மானிக்கப்படவுள்ளது.

2026-ஆம் ஆண்டிற்கான ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும், இதன் தொடக்க விழா பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

இந்த ஆண்டு சுமார் 90 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் ரூ.30 கோடி முதல் பரிசு, ஒரு டிக்கெட் விலை ரூ.500. இவ்வாறு டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்திருக்கும் வருவாய் மட்டும் ரூ.450 கோடியாம்.

இந்த லாட்டரி டிக்கெட் வாங்கியிருப்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசு விழும். ஒட்டுமொத்தமாக பரிசுத் தொகை மட்டும் ரூ.125.55 கோடியாம். இதில் கமிஷன் தொகை ரு.12.55 கோடியாக இருக்கிறது. கேரள மாநில அரசின் கருவூலத்துக்கு செல்லும் தொகை ரூ.241.20 கோடி. இந்த நடைமுறையில் திரட்டப்பட்ட ஜிஎஸ்டி ரூ.128.52 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலா ரூ.500 லாட்டரி டிக்கெட்டில் ரூ.268 கேரள அரசுக்கு வந்துவிடுமாம்.

Summary

Kerala Onam Bumper Lottery! First prize: ₹30 crore! Ticket price?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER