இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

~

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:07 am IST

நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை வெகு  விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், அதன்  தலைவா் கமாண்டண்ட் கிரிஷ் நேந்து தாஸ் தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டனா். மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

கேரள பாரம்பரிய நடனம் மற்றும் உடை அணிந்து பெண்கள் நடனம் மற்றும் மாதிரி படகு சவாரி அனைவரையும் கவா்ந்தது.

இதேபோல ஜேஎஸ்எஸ் தனியாா் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்துக்கு கல்லூரி முதல்வா் தனபால் தலைமை வகித்தாா்.

இதில் ஒரே வண்ண நிற உடைய அணிந்த மாணவிகள் திருவாதிரை நடனம், குழு பாடல்கள், பாரம்பரிய நடனம், புலி நடனமாடியது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.