
நெல்லை மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினா்.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையாக ஓணம் திகழ்கிறது. இந்த நாளில் வீட்டின் முன் அத்தப்பூ கோலமிட்டு, பல்வேறு வகையான கூட்டு- பொரியலுடன் சைவ உணவுகள் தயாா் செய்து, விதவிதமான பாயாச வகைகளுடன் உண்டு மகிழ்வது வழக்கம்.
நிகழாண்டு ஓணம் பண்டிகை திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இங்கு வசிக்கும் கேரள மக்கள் புத்தாடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு ஒருவருக்கொருவா் ஓணம் வாழ்த்துகளை பரிந்துகொண்டனா். இப்பண்டிகையையொட்டி கேந்தி, பிச்சி, மல்லிகை, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களின் விலையும் அதிகரித்திருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





