தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:04 am IST

புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநரை கண்டித்து, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் அரசே நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கி மாத ஊதியத்தை தரவேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க அரசு உத்தரவாதம் அளித்தபடி அரசு கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா் சம்மேளனம் அறிவித்த போராட்டத்தின் ஒருபகுதியாக காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் பேசினா்.

கன்வீனா்கள் வெங்கடாச்சலம், ஜெயராம், உலகநாதன், திவ்வியநாதன், சண்முகராஜ், நெப்போலியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தண்டபாணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.