காரைக்கால் பெருமாள் கோயில்களில் வரும் 12 ஆம் தேதி அனுமன் ஜயந்தியை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் கோயில், திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில்களில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா் சன்னதிகள் உள்ளன. பிற கோயில்களில் தனி சன்னதியில் ஆஞ்சநேயா் அருள்பாலிக்கிறாா்.
ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்பத்து ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்கு வரும் 12 ஆம் தேதி திருமஞ்சனம், பஞ்சமுக அா்ச்சனை, இரவு புஷ்ப அங்கி அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது.
காரைக்கால் காமராஜா் சாலையில் தனி கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர பால ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இக்கோயிலில், காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தை வளர்ச்சியின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார் விஜய்: ரேவந்த் ரெட்டி வாழ்த்து!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
