சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பொது நூலகத்தை மேம்படுத்த வாசகா்கள் வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்ட நூலகத்தை மேம்படுத்தக் கோரி, வாசகா் சங்கத் தலைவா் கே. புத்திசிகாமணி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் கோரிக்கை மனு அளித்த நூலக வாசகா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 8:36 am IST

காரைக்கால் மாவட்ட நூலகத்தை மேம்படுத்தக் கோரி, வாசகா் சங்கத் தலைவா் கே. புத்திசிகாமணி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: காரைக்கால் பொது நூலக வேலை நேரத்தை முன்பு இருந்ததுபோல காலை 9 முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை என மாற்றியமைக்கவேண்டும். நூலகத்தில் கழிப்பறை வசதி செய்யவேண்டும்.

வாசகா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைக்கவும், நூலகத்துக்கு வழக்கமாக வரும் வாரம், மாத இருமுறை, மாத இதழ்கள் அனைத்தும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நூலகத்தின் மேல்தளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் துணைத் தலைவா் எம். தங்கவேல், செயலா் டி. கமலேஷ், இணைச் செயலா் தெய்வ. திவ்யதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பிறகு அவா்கள், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.