விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை அருகே பழிக்குப் பழியாக இளைஞர் படுகொலை

திருப்பரங்குன்றம், ஆக.17: மதுரை  மாவட்டம் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் இளைஞர் ஒருவர் இன்று காலை 10.30மணி அளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ்  என்ற இளைஞர் பழி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:51 am

மது

திருப்பரங்குன்றம், ஆக.17: மதுரை  மாவட்டம் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் இளைஞர் ஒருவர் இன்று காலை 10.30மணி அளவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரமேஷ்  என்ற இளைஞர் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

மனோகரன், பூமிநாதன், ரமேஷ், பொட்டுப்பாண்டி என கல்லூரி மாணவ  நண்பர்கள் சிலருக்கிடையே எழுந்த தகராறில் மனோகரன் கடந்த ஜூன் 11ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் 4 பேர்  நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஆஜராகி வருகின்றனராம். இன்று இந்த வழக்கு தொடர்பாக அவனியாபுரம் வந்து திரும்பும்போது, 4 பேர் மீது ஒரு கும்பல் அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூமிநாதன், பொட்டுப்பாண்டி இருவரும் கவலைக்கு இடமான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றானர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.