108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்குப் பிறந்த பெண் குழந்தை!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு 108 இலவச ஆம்புலன்ஸில் மகப்பேறு நடைபெற்று பெண் குழந்தை பிறந்தது.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு 108 இலவச ஆம்புலன்ஸில் மகப்பேறு நடைபெற்று பெண் குழந்தை பிறந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மீனாட்சிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (25). இவரது மனைவி ஆனந்தவள்ளி (23). ஆனந்தவள்ளிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. தற்போது இரண்டாவதாக கர்ப்பமானார். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் ஆனந்தவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 இலவச ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விபத்து மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸை, டிரைவர் பாலசுப்பிரமணியம் விரைந்து மீனாட்சிபுரத்திற்கு கொண்டுவந்தார்.
அதில் ஆனந்தவள்ளியை டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் பாட்டக்குளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஆனந்தவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 108 இலவச ஆம்புலன்ஸில் இருந்த டெக்னீசியன்கள் பெரியநாயகி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் மகப்பேறு பார்த்துள்ளனர்.
பின்னர் ஆனந்தவள்ளி டி.மானகசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...