பல முறை அரசிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கே.அர்ஜூனன், ஐ.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் டி.எஸ்.பி. எஸ்.சக்திவேல், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.