பொள்ளாச்சி, மே 14: பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் காட்டம்பட்டி என்ற இடத்தில் கல்லுமார் தோட்டத்தில் வசித்துவருபவர்கள் மந்திரியப்பன், புஷ்பவதி(வயது 37) தம்பதியர். நேற்று நள்ளிரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மந்திரியப்பனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி மயக்கமடையச் செய்து, அவரது மனைவி புஷ்பவதியின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை பறித்துள்ளனர். அதனை புஷ்பவதி தடுக்கப் போராடியுள்ளார். இதில் அவரது கையிலும் கத்தியால் குத்தி சேதப்படுத்தி அவர்கள் 6 பவுன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து நெகமம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.