/

பள்ளிக்குள் வந்த நல்ல பாம்பு: உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிக்குள் வந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தார் அக் கிராமத்து இளைஞர்.

News image
Updated On :17 நவம்பர் 2012, 3:03 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிக்குள் வந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தார் அக் கிராமத்து இளைஞர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி, காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளிக்குள் நல்ல பாம்பு வந்துள்ளது. இது மாணவர் கூட்டத்தினுள் செல்ல முயன்ற போது, அக் கிராமத்து இளைஞர் சொக்கர்ராஜா (28) மற்றும் வன வேட்டை தடுப்பு காவலர் சுரேஷ் ஆகியோர் அந்த நல்ல பாம்பை துரத்திச் சென்று உயிருடன் பிடித்து ஊர் குழாயில் கட்டி வைத்தனர்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் வேலுச்சாமிக்கு தகவல் தரப்பட்டு, அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். வனத்துறையினர் பாம்பின் கட்டை அவிழ்த்து சாக்கில் போட்டு வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். சனிக்கிழமை பாம்பு செண்பகத்தோப்பு வனப் பகுதியில் கொண்டுபோய் பாதுகாப்பாக விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.