/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2012, 1:53 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை மின் பராமரிப்பு வேலை என காரணம் கூறி, நாள் முழுவதும் மின்சாரம் வழங்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை. மின்வாரியத்தில் கேட்டால், மரம் விழுந்துவிட்டது என ஒவ்வொரு நாளும் ஒரு காரணம் கூறி பகல் மற்றும் இரவில் பெரும்பாலான நேரங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின்தடையால் மின்விசிறி செயல்படாததால் 3-வது வார்டில் மட்டும் சுமார் 60 பேர் கொசுக் கடித்து  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவ மாணவியரின் படிப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நகராட்சி 3-வது வார்டு பொது மக்கள் சுமார் ஆயிரம் பேர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், காமராஜர் சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸார் மற்றும் நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் இப் பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.