ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் கீழ்பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் கீழ்பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு கோபிகிருஷ்ணன் (3) என்ற மகனும், சுபலட்சுமி என்ற ஒன்னறை வயது மகளும் உண்டு.
பெரியசாமி வீட்டின் அருகே டீக்கடை வைத்துள்ளார். கோபிகிருஷ்ணன் (படம்), மங்காபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குச் சொந்தமான விநாயகா வித்யாலயாவில் பிரி கே.ஜி. படித்து வந்தார்.
கடந்த 5 தினங்களுக்கு முன்னர் கோபிகிருஷ்ணனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள வாடிக்கையாக செல்லும் கூனங்குளம் நடுத்தெருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அங்கு இரு நாட்கள் டாக்டர் கணேசன் சிகிச்சை அளித்துள்ளார். இரு நாட்கள் காய்ச்சல் விடாததால் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் சிறுவனுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான சிகிச்சையை டாக்டர் அளித்தாராம்.
செவ்வாய்கிழமை இரவு கோபிகிருஷ்ணன் மிகவும் மோசமாக இருந்ததால், டாக்டர் கணேசன், அரசு மருத்துவமனையில் இதற்கான மருந்துகள் உள்ளன. எனவே அங்கு கொண்டுபோய் சேருங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கோபிகிருஷ்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் குளுக்கோஸ் ஏற்றியுள்ளார்கள். குளுக்கோஸ் ஏறவில்லையாம். பின்னர் வயிறு வீங்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை அதிகாலை டாக்டர்கள் கோபிகிருஷ்ணன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள்.
இது குறித்து அவரது தந்தை பெரியசாமி கூறுகையில், இப் பகுதியில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கிறார்கள். ஆனால் சந்துகளுக்குள் வந்து அடிப்பது இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகனை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டார்கள். முதலிலேயே மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் மகன் பிழைத்திருப்பான் என்று கூறுகிறார்கள். அது தெரியாமல் போய்விட்டது என்றார்.
நகராட்சி நிர்வாகம் மங்காபுரம், பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என இப் பகுதி மக்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...