/

கலசலிங்கம் பல்கலை.யில் ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.30 கடைசி நாள்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி (பி.ஹெச்.டி.) பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும். 

News image
Updated On :22 நவம்பர் 2012, 10:25 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி (பி.ஹெச்.டி.) பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும். 
இது குறித்து கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் பி.கன்னியப்பன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், இயந்திரவியல், கருவியல் துறை, மின்னியல், மின்னணுவியல், நிர்வாக மேலாண்மை, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதியாகும்.
விண்ணப்பங்களை, பல்கலைக்கழக இணைய தளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் பதிவாளர், கலசலிங்கம் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ரூ.500-க்கான வரவோலையை இணைத்து, விண்ணப்பங்களை டீன், ஆராய்ச்சித்துறை, கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில் 626 120, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் என துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.