முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலர் கணவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :29 நவம்பர் 2012, 10:01 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது அணியில் காவலராக பணிபுரிந்து வருபவர் உமாலட்சுமி. இவருக்கும் மதுரை, முரட்டன்பத்திலி, புதுஜெயில் ரோடு பகுதியில் குடியிருந்து வரும் குருசாமி மகன் செந்தில்பாண்டியன் (27) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனிக்குடித்தனமாக மொட்டமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளனர். செந்தில்பாண்டியன் இப் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.

மேலும் செந்தில்பாண்டியன் தனது ஊதியத்தில் இருந்து தனது தந்தைக்கு மாதம் ரூ.1500 கொடுத்து வந்துள்ளார். இதற்கும் உமாலட்சுமி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனம் உடைந்த செந்தில்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விஷம் குடித்துள்ளார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாண்டியன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

இவரது தந்தை குருசாமி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.