மதுரை நகைக் கடையில் 2 அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு
மதுரை திருநகர் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் பூட்டை உடைத்து இரண்டரைக் கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது.


மதுரை திருநகர் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் பூட்டை உடைத்து இரண்டரைக் கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது.
மதுரை திருநகர் 4வது பேருந்து நிறுத்தம் பால்சாமி தெரு பகுதியைச் சேர்ந்த எஸ்விஎஸ் நகைக் கடை உரிமையாளர் காமாட்சி. நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். அப்போது தங்க நகைகளை அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். அதேப்போல அனைத்து தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், இன்று காலை கடையைத் திறக்க காமாட்சி வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 2 அரை அகிலோ வெள்ளி மற்றும் 1 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து திருநகர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...