அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாகனங்கள் தணிக்கை!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கார், வேன், பஸ், ஆம்புலன்ஸ், டெம்போ, லாரி, டிராக்டர் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில் சில வாகனங்கள் கணக்கில் உள்ளது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகி ஷ்வ்தாஸ் மீனா உத்தரவின் பேரில் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டன.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கார், வேன், பஸ், ஆம்புலன்ஸ், டெம்போ, லாரி, டிராக்டர் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில் சில வாகனங்கள் கணக்கில் உள்ளது. ஆனால் இயங்கவில்லை எனக்கூறப்படுகிறது. சில வாகனங்கள் சென்னையில் உள்ள கல்லூரியில் இயங்குவதாக தெரிகிறது.
இந்நிலையில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் அனைத்து வாகனங்களும் கொண்டு வரப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. பல்கலைக்கழக பொறியியல் புலத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவர் கிருஷ்ணமோகன் வாகனங்களை தணிக்கை செய்தார். தணிக்கையின் போது வாகனங்கள் ஒழுங்கான நிலையில் உள்ளதா? டிரைவர்களுக்கு லைசென்ஸ் உள்ளதா? ஆர்.சி.புக், இன்ஸ்யூரன்ஸ் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த வாகன தணிக்கையில் பல்கலைக்கழகத்தில் உள்ள கார், வேன், டெம்போ, டிராக்டர், லாரி, ஆம்புலன்ஸ், பஸ் உள்ளிட்ட சுமார் 71 வாகனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...