இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் பகுதியில் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

சிதம்பரம் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் உள்ள 10 எம்விஏ திறன் மின் மாற்றியினை திறனை உயர்த்தும் வகையில் புதிய 16 எம்விஏ திறன் உள்ள

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 9:51 am

G.Sundararaj

சிதம்பரம் பகுதியில் இன்று முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்படும் என சிதம்பரம் கிளை மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்: சிதம்பரம் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் உள்ள 10 எம்விஏ திறன் மின் மாற்றியினை திறனை உயர்த்தும் வகையில் புதிய 16 எம்விஏ திறன் உள்ள மின்மாற்றி பொருத்தும் பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மாலை நேரங்களில் தற்போது உள்ள மின்தடையுடன் கூடுதலாக ஒரு மணி நேரம் கீழ் கண்ட பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, மாரியப்பாநகர், வண்டிகேட், சி.முட்லூர், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, அண்ணாமலைநகர், மணலூர், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம், கிள்ளை, பின்னத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கடும் வெய்யில், கடும் மின்வெட்டு, மக்கள் கடும் அவதி!

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுகிறது. வசதி படைத்தவர்கள் இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளதால் மின்வெட்டினால் பாதிப்பு இல்லாமல் உள்ளனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் கடும் வெய்யிலினாலும், அதிகளவு நேரம் மின்வெட்டினாலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது செய்யப்பட்ட மின்வெட்டுடன் தற்போது மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாவார்கள். மின்வெட்டினால் சிதம்பரம் பகுதியில் ஐஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐஸ் போட்ட குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.