வீராணம் ஏரியின் பரப்பளவை அதிகப்படுத்த தற்போது அங்குள்ள வண்டல் மண்ணை கருத்தில் கொண்டு ஒதுக்கப்பட்ட நிதி. இந்த நிதி மிக, மிக குறைவாகும். இருந்தாலும் ஒதுக்கப்பட்ட நிதியை சரியான முறையில் செலவீனம் செய்தால் வீராணம்ஏரியின் கொள்ளவை ஒரளவு உயர்த்த முடியும். வீராணம்ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். ஏரியில் 45 அடி நீர் நிரம்பினாலே மேல்கரையில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இந்த நிலத்தில் ஏரியில் உள்ள மண்ணை கொண்டு மேல்கரையை உயர்த்த திட்டமிடப்பட்டு, இதுநாள் வரையில் செயல்படுத்தப்படவில்லை. எனவே தற்போது ஒதுக்கப்பட்ட ரூ.40 கோடி நிதியை கொண்டு வீராணம்ஏரியின் மேல்கரையில் விளை நிலங்களை உயர்த்திடவும், மேல்கரையை பலப்படுத்தவும், ஏரியின் மேல்புறத்தை ஆழப்படுத்தினால் ஏரியின் நீர் மட்டம் ஒரளவு உயரும். இதனால் ஏரியின் மேல்பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்படாது. ஏரியின் மேல்பகுதியை ஆழப்படுத்தும் போது ஏரியின் கொள்ளளவு உயரும் என கே.வி.கண்ணன் தெரிவித்துள்ளார்.