இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சப்-இன்ஸ்பெக்டர் தாக்கி சிகிச்சை பெற்றுவருபவரை சந்தித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுதல்!

சிதம்பரம் அருகே சோழத்தரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் படுகாயமுற்று அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சங்கர் (32), சத்தியமூர்த்தி (32) ஆகிய இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சங்கருக்கு மண்ணீரல் அகற்றப்பட்டது. தகவல் அறிந்த மார்க்சிஸ்ட்

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 11:17 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே சோழத்தரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் படுகாயமுற்று அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே சோழத்தரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் படுகாயமுற்று அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சங்கர் (32), சத்தியமூர்த்தி (32) ஆகிய இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சங்கருக்கு மண்ணீரல் அகற்றப்பட்டது. தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து, சிகிச்சை விபரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில துணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.