அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க நூல்கள் வாசிப்பு!

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சிதம்பரம் கிளை நூலகத்திலிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூல்கள்

News image
Updated On :23 ஏப்ரல் 2013, 10:53 am

G.Sundararaj

உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளி மாணவர்களுக்கு நூலகத்திலிருந்து நூல்கள் வழங்கப்பட்டு காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒரு மணி நேரம் நூல்கள் வாசிக்கப்பட்டது.

சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சிதம்பரம் கிளை நூலகத்திலிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூல்கள் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன், வாசக வட்டத் தலைவர் சி.டி.ராமசாமி, தலைமை ஆசிரியை ப.வாசுகி, நூலகர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாசிக்க புத்தகங்களை வழங்கினர். மேலும் கிளை நூலகத்திற்கு புதிய உறுப்பினர்களாக 50 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டனர். முடிவில் தமிழாசிரியை கஸ்தூரிரங்கன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.