அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மணல் கடத்திய டிராக்டரை பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி

காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் மணல் குவாரி உள்ளது. தற்போது அந்த மணல் குவாரி மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் இரவு, பகலாக அங்கிருந்து மணலை திருடி டிராக்டர் மற்றும் லாரி மூலம் கடத்துவதாக

News image
Updated On :24 ஏப்ரல் 2013, 10:51 am

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே மணல் கடத்திய டிராக்டரை பிடிக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் மணல் குவாரி உள்ளது. தற்போது அந்த மணல் குவாரி மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் இரவு, பகலாக அங்கிருந்து மணலை திருடி டிராக்டர் மற்றும் லாரி மூலம் கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஓமாம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அக்னிராஜ் (25) இன்று காலை மணல் கடத்திய டிராக்டரை பிடிக்க பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது டிராக்டர் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தி திடீரென பின்புறமாக இயக்கி கிராம நிர்வாக அலுவலர் மீது மோதி முயன்றதாக தெரிகிறது. இதிலிருந்து தப்பிய கிராம நிர்வாக அலுவலர் அக்னிராஜ் வட்டாட்சியர் தில்லைகோவிந்தனிடம் புகார் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் தில்லைகோவிந்தன் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.