அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சம்பளம் வழங்கப்படாமல் அலைகழிக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள்!

தமிழகஅரசு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நெட் பேக்கிங் முறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும், கோர் பேங்கிங் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்கி பாஸ் புத்தகம் மற்றும்

News image
Updated On :30 ஏப்ரல் 2013, 11:46 am

G.Sundararaj

சிதம்பரம் வட்டத்தில் சம்பளம் வழங்கப்படாமல் இரு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலதுறையினர் கருவூல அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகஅரசு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நெட் பேக்கிங் முறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும், கோர் பேங்கிங் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்கி பாஸ் புத்தகம் மற்றும் எண்ணை வட்டாட்சியரிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் அனைவரும் வட்டாட்சியரிடம் வங்கி பாஸ் புத்தகத்தை வழங்கினர். அதனடிப்படையில் சம்பளம் வழங்க எப்போதும் போல் கருவூலத்திற்கு பில் அனுப்பபட்டது. அவர்கள் அதனை சி.டி மூலம் பாரத ஸ்டேட் வங்கி அனுப்பி வைத்தனர். வங்கி மூலம் அவரவர் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதிய முறை என்பதால் தாமதமாக மாதக்கடைசியில் பிப்ரவரி மாதம் சம்பளம் கிடைத்தது. மார்ச் மாதம் சம்பளம் கருவூலத்தில் நெட்வொர்க்க கோளாறினால் மொத்தமாக சம்பளத்தை காசோலை அளித்து வங்கியிலிருந்து பணம் எடுத்து ரொக்கமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிதம்பரம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த பலருக்கு பிப்ரவரி மாதம் இதுநாள் வரை வழங்கப்படாமல் கருவூல அதிகாரிகளாலும், வங்கி அதிகாரிகளாலும் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பளம் குறித்து கருவூல அதிகாரிகளை சந்தித்து கேட்ட போது, வங்கியில் சென்று விசாரித்து பெற்றுக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர். வங்கிக்கு சென்றால் கருவூலதுறையில் இருந்து முழுவிபரம் பெற்று வாருங்கள் செக் போட்டு தருகிறோம் என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பிறதுறைகளைச் சேர்ந்த பலரும் பிப்ரவரி மாதம் சம்பளம் வழங்கப்படாமல் அலைகழிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பளத்தை நம்பி வாழும் அரசு ஊழியர்களுக்கு அலைகழிக்கப்படாமல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.