விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரையில் ரஷ்ய பயணி தூக்கி வீசிய துப்பாக்கியால் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் ரஷ்ய பயணி ஒருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். அவர் இந்தியாவில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து,

News image
Updated On :3 ஜனவரி 2013, 8:24 am

மது

மதுரை விமான நிலையத்தில் ரஷ்ய பயணி ஒருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். அவர் தனது காதலி ஓல்கா செரன்யாக் என்பவருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.  சுற்றுலா விசாவில் தங்கியிருந்து, இன்று அவருக்கான சுற்றுலா விசா கெடு முடிவடைந்ததை அடுத்து, இலங்கை வழியாக ரஷ்யாவுக்குச் செல்ல எண்ணினார். அவர் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்த ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள், துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று அவரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து, வெளியே வந்த அவர், ஒரு பிளாஸ்டிக் கவரில் துப்பாக்கி சிலிண்டர், துப்பாக்கி உள்ளிட்டவற்றைச் சுற்றி விமான நிலையத்துக்கு வெளியே ஒரு புதரில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டார். இதனிடையே இதனைப் பார்த்துவிட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.

புதருக்குள் தேடிய போலீஸாருக்கு இந்தத் துப்பாக்கி கிடைத்தது. அதனை சோதனையிட்ட போலீஸார் அது ஏர் கன் வகையைச் சேர்ந்தது என்று கூறினர். இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரஷ்ய பயணி விமானத்தில் ஏறி இலங்கைக்குச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் விமான நிறுவன ஊழியர்கள் கேட்டபோது, தில்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் ஒன்றும் கேட்கவில்லை என்றும், இத்தனை நாட்கள் அந்த துப்பாக்கியுடன் சுற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தகவல் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தச் செய்தி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.