ஜெயலலிதா பிரதமராக 40 தொகுதிகளையும் வெல்வோம்: தளவாய் சுந்தரம்
ஜெயலலிதாவை பிரதமராக்க வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் நாம் வெல்வோம் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் பேசினார்


ஜெயலலிதாவை பிரதமராக்க வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் நாம் வெல்வோம் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் பேசினார்.
சிதம்பரம் போல்நாராயணன்தெருவில் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் 96-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜெ பேரவை வார்டு செயலாளர் எஸ்.ஏ.ராஜா தலைமை வகித்தார். எம்ஜிஆர் மன்றச் செயலாளர் எம்.ஜி.பாரிவள்ளல் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், தொகுதி இணைச்செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, தில்லைசெல்வம், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தொடக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த நம்மக்களின் நலனுக்காக அணை கட்டிய பென்னிகுவிக்கிற்கு மணிமண்டபம் கட்டி பெரும் சேர்த்தவர் ஜெயலலிதா, காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லைபெரியாறு அணை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பாடுபடுபட்டு வருகிறார். ஆனால் காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து கருணாநிதி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு விலையில்லா பொருள்களை வழங்கி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...