கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சாவு

சிதம்பரம் புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த இருவர் இறந்தனர்.

News image
Updated On :19 ஜனவரி 2013, 2:31 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த இருவர் இறந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குத்தூஸ் (70). இவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை குடியாத்தத்தில் இருந்து காரில் சிதம்பரம் வழியாக நாகூர் சென்றனர். அப்போது குத்தூஸ் மகன் கரீம் ஓட்டிச் சென்றார். கார் பி.முட்லூர்-வண்டிகேட் புறவழிச்சாலையில் சென்ற போது குறுக்கே வந்த இளைஞர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்ட போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பளளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் குத்தூஸ், கரீம்,  காரில் பயணம் செய்த காதர்பீவி, பெளஜியா, தாவூத்தஸ்தகீர் மற்றும் சாலையில் நடந்து சென்ற கீரப்பாளையத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேரும் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குத்தூஸ் மற்றும் கீரப்பாளையத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய இருவரும் சனிக்கிழமை இறந்தனர். மேலும் 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.