மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் தர்ணா

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக- திமுக உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. இதன்பின்னர் அவர்கள் அவையின் நடுப்பகுதிக்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :31 ஜனவரி 2013, 5:46 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக- திமுக உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. இதன்பின்னர் அவர்கள் அவையின் நடுப்பகுதிக்குச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்காக பந்தல் அமைப்பது தொடர்பாக பிரச்னை எழுந்தது, அப்போது, மாநகராட்சி ஆணையர் இடத்தை மாற்றம் செய்து உத்தரவிட்டாராம். அதனால் வேறு ஒரு இடத்தில் கூட்டம் நடந்துள்ளது.

இதற்கு கேலி செய்யும் விதமாக இன்று மாநகராட்சி மன்றக் கூட்டத்துக்கு வந்திருந்த திமுக உறுப்பினர்கள், கறுப்புச் சட்டை அணிந்து, ஆணையருக்கு நன்றி; ஆணையர் உத்தரவால் கூட்டம் புதிய இடத்தில் மிகச் சிறப்பாக நடந்தது என்று பதாகைகளைப் பிடித்தனர். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேப்பரில் எழுதிக் காண்பித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அனைவரும் மேயர் இருக்கைக்கு முன்னர் அமர்ந்து தர்ணா செய்தனர்.

இந்நிலையில், மேயர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். செல்லும் போது, இன்றைய தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றம் (ஆல் பாஸ்ட்) என்று கூறிச் சென்றாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.