இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிறுபான்மையினர் நலன் காக்க தனி அமைச்சகம் அமைத்தது காங்கிரஸ் அரசு தான்: ஜி.கே.வாசன்

வாணியம்பாடி-பெருமாள்பேட்டை கூட்டு சாலையில் வாணியம்பாடி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரம்ஜான் பண்டிக்கை முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் அரிசி

News image
Updated On :28 ஜூலை 2013, 10:23 am

ராஜேஷ்

இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் விதமாக தனியே அமைச்சகம் அமைத்து நடத்தி வருவது காங்கிரஸ் அரசு தான் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

வாணியம்பாடி-பெருமாள்பேட்டை கூட்டு சாலையில் வாணியம்பாடி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரம்ஜான் பண்டிக்கை முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் அரிசி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் வக்கீல் அஸ்லம்பாஷா தலைமை தாங்கினார். வேலூர் முன்னாள் எம்எல்ஏ சி.ஞானசேகரன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நல உதவிகளை வழங்கி பேசியதாவது:-

ஏழை, பணக்காரர்கள் என்று வேறுபாடின்றி ரமலான் மாதத்தில் நோன்பிருந்து அடுத்தவர்களின் பசியை அறிந்து உதவி செய்து வரும் சிறுபான்மை மக்கள் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் வரலாறு மற்றும் பண்பாட்டினால் என்றுமே நாம் ஒன்றுப்பட்டு இருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியின் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் சிறுபான்மை மக்களின் மீது தனி கவனம் செலுத்தி 2004 ஆம் ஆண்டிலிருந்து பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-13 ஆம் ஆண்டும் மட்டும் சிறுபான்மை நலனுக்காக 1593 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பாண்டு 2013-14 ல் ரூ.3511 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மெüலானா அபுல்கலாம்ஆசாத் கல்வி வளர்ச்சி நிதியின் மூலம் 160 கோடி ரூபாய் ஒதுக்கப்ப்டடுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு அரணாகவும், தேவைப்படின் அவர்களை காக்கும் வாளாகவும் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆகவே காங்கிரஸ் கட்சிக்கு தங்களின் முழுமையான ஆதரவை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பைசல் அமீன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.தொடர்ந்து ஆலங்காயம் அடுத்த முல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமிநாரயண சுவாமி திருக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வேலூர் முன்னாள் எம்எல்ஏவுமான சி.ஞானசேகரன் தலைமையில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோவிலின் புனரமைப்பு பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், தனது சொந்த நிதியாக ரூ.1 லட்சம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.