ரூ. 50 லட்சம் முதல் ரூ 1 கோடி தொகைக்கு மேல் நன்கொடை பெறப்பட்டு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டு வந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை, பல்கலைக்கழக நிர்வாகியின் நடவடிக்கையால் எவ்வித நன்கொடை இன்றி தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளது பல்கலைக்கழக வரலாற்றிலேயே இதுதான்தான் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ், பிபிடி, பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை முழுமையாக தகுதி அடிப்படையில் நடைபெறும் என்பதால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நுழைவுத்தேர்விற்கு சுமார் 22500 விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.